UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 09:40 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பள்ளிக் கல்வித் துறையில், 61 பேருக்கு கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில், பணியின்போது இறந்த, 61 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு அடையாளமாக, நான்கு பேருக்கு பணி நியமன ஆணைகளை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
