தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால் இழந்த மாணவருக்கு கைகொடுத்த கல்லுாரி

கால் இழந்த மாணவருக்கு கைகொடுத்த கல்லுாரி

கால் இழந்த மாணவருக்கு கைகொடுத்த கல்லுாரி


UPDATED : ஆக 01, 2023 12:00 AM

ADDED : ஆக 01, 2023 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2023 12:00 AM ADDED : ஆக 01, 2023 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மதுரை, கோச்சடை பகுதியை சேர்ந்தவர் பரிதி விக்னேஸ்வர், 19. ஜூடோ வீரரான இவர் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் (ஜூலை 26), பழுதான மின் கம்பத்தை ஊழியர்கள் அகற்றிக்கொண்டிருந்த போது, மின் கம்பம் சரிந்து பரிதி விக்னேஸ்வர் காலில் விழுந்ததில் அவரின் இடது கணுக்கால் முறிந்தது. இந்த மாணவர், ஜூடோ போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளதால், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி, இவருக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இலவச கல்வி வழங்கியது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக மாணவர் தனது காலை இழந்து, கல்லுாரி சார்பில் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், கல்லுாரியின் தலைவர் மோகன் ராம் மற்றும் இயக்குனர் ராஜாராம் ஆகியோர், மாணவருக்கு உதவ முன்வந்து அவருக்கு கல்வி, விடுதி உள்ளிட்டவற்றை இலவசமாக அளிக்க உறுதியளித்துள்ளனர். மாணவருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு போன்ற உதவிகள் தேவைப்பட்டால், அவற்றையும் கல்லுாரி நிர்வாகம் செய்து தரும் என உறுதி அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us