சிங்கப்பூர் செயற்கைகோள்கள் தயாரித்த அரியலுார் விஞ்ஞானி
சிங்கப்பூர் செயற்கைகோள்கள் தயாரித்த அரியலுார் விஞ்ஞானி
UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 10:04 AM
சிறுவயது முதலே செயற்கைகோள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கல்லுாரி படிப்பை சென்னை, ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்தார். பின், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில், சில மாதங்கள் தங்கி, செயற்கைகோள்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து படித்தார். தற்போது, சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் செயற்கைக்கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பல சிறிய மற்றும் பெரிய வகை செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு குழு தலைவராக பணிபுரிகிறார். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிங்கப்பூர் சார்பில், பி.எஸ்.எல்.வி., சி 56 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் ஏவப்பட்ட, ஏழு செயற்கைக்கோள்களில், ஆர்கேட், ஸ்கூப் 2, வேலோக்ஸ் -ஏ.எம்., ஆகிய மூன்றின் திட்ட மேலாளராக இருவர் பணியாற்றினார். போதிய போக்குவரத்து வசதி கூட இல்லாத குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்த சண்முகசுந்தரம், சிங்கப்பூர் நாட்டின் சார்பில் அனுப்பப்பட்ட மூன்று செயற்கோள்களை தயாரித்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.இது குறித்து அவர், தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
விண்ணுக்கு நேற்று ஏவப்பட்ட செயற்கைகோள்கள், பலரது கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் திட்ட மேலாளராக இருந்தேன். இன்னும் பல செயற்கைகோள்களை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
