தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கல்வி துறையிலும் ஆர்டர்லி முறை?

பள்ளிக்கல்வி துறையிலும் ஆர்டர்லி முறை?

பள்ளிக்கல்வி துறையிலும் ஆர்டர்லி முறை?


UPDATED : ஆக 01, 2023 12:00 AM

ADDED : ஆக 01, 2023 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2023 12:00 AM ADDED : ஆக 01, 2023 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
போலீஸ் துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில், ஆர்டர்லி முறையில் போலீசார் எடுபிடி வேலை செய்வது போன்று பள்ளிக்கல்வி துறையிலும் காணப்படுகிறது. மாணவர்களுக்கு உடற்கல்வி பயற்சி அளிக்க வேண்டிய அரசு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு எடுபிடி வேலை பார்ப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 45,000 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 6,500 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே, உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும், 38 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும், 125 மாவட்ட கல்வி அதிகாரிகள் என, 163 அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த அதிகாரிகளின் கீழ், குறைந்தபட்சம் தலா, 4 உடற்கல்வி ஆசிரியர்கள் வீதம், 650க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், ஆர்டர்லி என்ற எடுபிடி வேலைகளில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.வழக்குகளுக்காக பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து, கோர்ட்டுக்கு பைல் கொண்டு செல்வது, ஆபீஸ் பாய் வேலை, நலத்திட்ட பொருட்களை எடுத்து வருவது, பள்ளிக்கல்வியின் அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது, அதிகாரிகளுடன் காரில் உதவியாளராக செல்வது போன்ற பணிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாத சம்பளத்துக்காக ஆசிரியர்களின் வருகைப்பதிவு விபரம் சேகரிப்பு, கருவூலத்துக்கான ஆவணங்களைசேகரித்து ஒப்படைத்தல், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தேவையான பிற பணிகளும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு, இந்திய பள்ளி விளையாட்டு சங்க விளையாட்டுகள், ஆசிய போட்டிகள் என, எந்த போட்டியிலும், அரசு பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க முடியவில்லை.இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்க மாநில செயலர் ராஜா சுரேஷ் கூறியதாவது:தமிழக அரசு பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக்கு மட்டும் தான் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களையும், முறையாக விளையாட்டு பயிற்சி பணிகளில் ஈடுபடுத்தாமல், அவர்களது படிப்புக்கு தொடர்பே இல்லாத, பிற சேவக பணிகளை பார்க்க வைப்பது வருந்தக்கூடிய விஷயம். தேசிய அளவில், 83 வகை விளையாட்டுகள் உள்ளன. அவற்றில், 40 விளையாட்டுகளை மட்டுமே, தமிழக மாணவர்கள் விளையாடுகின்றனர். அதனால், மற்ற விளையாட்டுகளுக்கும் நமது மாணவர்களுக்கு, அதிக பயிற்சி தேவைப்படுகிறது. இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்களை விளையாட்டு பயிற்சி வேலைகளில் அனுமதிக்காவிட்டால், நமது மாணவர்கள் தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவது மேலும் பின்தங்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பதக்கம் வேண்டாமா?
அரசு பள்ளிகளில் வாரம் இரண்டு பாடவேளைகள், உடற்கல்விக்கு திட்டமிடப்படுகின்றன. ஆனால், அந்த பாட வேளைகளை உடற்கல்வி ஆசிரியர்களின் பயிற்சிக்கு ஒதுக்குவதில்லை. உடற்கல்விக்கு பாடத்திட்டம், பாடம் மற்றும் பயிற்சி முறை இருந்தும், உடற்கல்வி ஆசிரியர்களால், மாணவர்களுக்கு செயல்படுத்த முடியவில்லை. அவர்களும் ஆசிரியர்கள் தான், அதற்கான படிப்பை முடித்து தான் வந்துள்ளனர் என்பதை அதிகாரிகளும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உணர வேண்டும். நமது உடற்கல்வி ஆசிரியர்களை எடுபிடி வேலைக்கு பயன்படுத்தாமல், மாணவர்களின் விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தினால் மட்டுமே, தமிழகம் தேசிய அளவில் அதிக பதக்கங்களை பெறும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர் சங்கம் மாநில தலைவர் சங்கர பெருமாள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us