தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்று 20,000 பேருக்கு இடம் ஒதுக்கீடு

இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்று 20,000 பேருக்கு இடம் ஒதுக்கீடு

இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்று 20,000 பேருக்கு இடம் ஒதுக்கீடு


UPDATED : ஆக 01, 2023 12:00 AM

ADDED : ஆக 01, 2023 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2023 12:00 AM ADDED : ஆக 01, 2023 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ.,  பி.டெக்., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, 1.61 லட்சம் இடங்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொது ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, முதல் சுற்று கவுன்சிலிங், கடந்த 28ல் துவங்கியது. நேற்று காலையில், உத்தேச இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 177 முதல், 200 வரை, கட் ஆப் மதிப்பெண் பெற்ற, 22,761 பேர் பங்கேற்றனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், தொழிற்கல்வியில், 198 பேர் உட்பட, 1,135 அரசு பள்ளி மாணவர்களும், மற்ற பிரிவில் தொழிற்கல்வியில், 1,207 பேர் உட்பட, 19,025 பேரும் என, மொத்தம், 20,160 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.இவர்கள் இன்று மாலை, 5:00 மணிக்குள், தங்களுக்கான இடங்களை ஆன்லைன் வழியில் உறுதி செய்ய வேண்டும். பின், வரும், 2ம் தேதி காலையில், தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டை பெறும் மாணவர்கள், ஆக.,6ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர்ந்து, இடத்தை உறுதி செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய முதல் சுற்று ஒதுக்கீட்டில், கணினி அறிவியல் பிரிவுக்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. எந்தெந்த பாடப் பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்தனர் என்ற விபரம், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில், நாளை வெளியிடப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us