தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் அருகே மஞ்சக்குழி கிராமத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் தங்கி பயிற்சி பெறும் திட்ட தொடக்க விழா நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதியாண்டு வேளாண்புலத்தை சேர்ந்த மாணவியர், மஞ்சக்குழி கிராமத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவம் பெற்று வருகின்றனர். இதன் துவக்க விழாவிற்கு மாணவி மதுமிதா வரவேற்றார். ஊராட்சி தலைவர் சற்குருநாதன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் கமலக்கண்ணன், சந்தோஷ், குழு பொறுப்பாளர் மற்றும் வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் பாலமுருகன் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து, குறு நாடகம் மூலம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவி மெகனாஸ் யாஸ்மின் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us