தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கதவுகளே கரும்பலகை!

கதவுகளே கரும்பலகை!

கதவுகளே கரும்பலகை!


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாரி:
சிராவரா கிராமத்தின் அரசு துவக்கப் பள்ளியில், அடிப்படை வசதிகள் அறவே இல்லை. வகுப்பறை கதவுகளே, கரும் பலகையாக மாறி உள்ளன.பல்லாரியின் சிராவரா கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இதில், 793 மாணவர்கள் படிக்கின்றனர். பழைய கட்டடம் என்பதால், அனைவரும் அமர்ந்து பாடம் கேட்க, போதுமான வகுப்பறைகள் இல்லை. எனவே ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே, பாடம் நடத்துகின்றனர். சிலர் கதவுகளை கரும்பலகையாக பயன்படுத்துகின்றனர். பள்ளிக்காக கல்யாண கர்நாடகா வளர்ச்சி ஆணையம், 18 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை, சமீபத்தில் கட்டியது. இவற்றில் 10 வகுப்பறைகள், மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைத்துள்ளனர். மற்ற அறைகளை பயன்படுத்த, அரசின் அனுமதி கிடைக்கவில்லை.ஆசிரியர்கள் கூறியதாவது:
வகுப்பறைகள் இல்லாததால், கதவுகளை கரும்பலகையாக பயன்படுத்த வேண்டியுள்ளது. புதிய வகுப்பறைகளை பயன்படுத்த, அனுமதி அளிக்கும்படி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். சில வகுப்பறைகளின் ஜன்னல், கதவுகளை பழுது பார்க்க வேண்டும். கதவுகளை, கரும்பலகையாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவதில், ஆசிரியர்களின் தவறு ஏதும் இல்லை. வகுப்பறைகள் கிடைக்கும் வரை, நேரம் வீணாகக் கூடாது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால், கதவுகளை கரும்பலகையாக பயன்படுத்தி, பாடம் நடத்துகிறோம். பள்ளியில் சரியான கழிப்பறை வசதி இல்லை. குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. சமீபத்தில் பெய்த மழையால், பள்ளி வளாகம் ஏரி போல மாறியது. இதை பொருட்படுத்தாமல், ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us