இன்ஜி., கவுன்சில்: மாணவர்கள் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்
இன்ஜி., கவுன்சில்: மாணவர்கள் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்
UPDATED : ஆக 03, 2023 12:00 AM
ADDED : ஆக 03, 2023 08:54 PM
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஒதுக்கீட்டு இடத்தை உறுதி செய்தவர்கள் ஒதுக்கீடில் குறிப்பிட்ட கல்லுாரியிலும்; இடத்தை உறுதி செய்து அதே நேரத்தில் வேறு இடங்களை கேட்டுள்ளவர்கள் கவுன்சிலிங் உதவி மையங்களிலும் ஆக., 6ம் தேதிக்குள் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.அப்போது கல்லுாரி கட்டணத்தின் முன் தொகையை ரொக்கமாகவோ, ஆன்லைன் வழியிலோ செலுத்தலாம். இதில் அரசு பள்ளி மாணவர்கள் பிரதமர் கல்வி உதவி தொகை திட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டாம். ஆனால் சான்றிதழ்களை கொடுத்து, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒதுக்கிய இடம் 9ம் தேதி இறுதி பட்டியலில், வேறு நபருக்கு வழங்கப்படும் என, கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.
