UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 10:37 AM
அ நிறம் | அளவு
தாம்பரம்:
தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை குறித்து, மாணவ - மாணவியரிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தில், ஐந்து கல்லுாரிகளின் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்கள், தமிழர் பண்பாடு குறித்து பேசினர். தமிழர் மரபும் -நாகரிகமும், தமிழகத்தில் சமூக நீதி உட்பட பல தலைப்புகளில், அடுத்தடுத்த நாட்களில் சொற்பொழிவு நடக்கவுள்ளதாக, கல்லுாரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
