தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய விழிப்புணர்வு


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை : ஐ.நா., சபை, இந்தண்டை சிறு தானியங் களின் ஆண்டாக அறிவித்திருக்கிறது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையினர், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை, கிராமம் தோறும் ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், பொங்கலுார் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர், அரசுப்பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிலைய தலைவர் இளையராஜன், உணவியல் துறை விஞ்ஞானி கவிதா ஸ்ரீ ஆகியோர், சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினர். கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்ற சிறு தானியங்களை காண்பித்து, அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவு, அதில் நிறைந்துள்ள சத்துகள் குறித்து குழந்தைகளிடம் காண்பிக்கப்பட்டது.சிறு தானியங்களை உட்கொள்வதால், புரதம், நார்சத்து, கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன; தசைகள் வலுப்பெற உதவுகின்றன என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பள்ளி குழந்தைகள், அடுப்பில்லாமல் சிறுதானிய உணவு சமைத்து அசத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us