தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவு வட்ட பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் - 3

நிலவு வட்ட பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் - 3

நிலவு வட்ட பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் - 3


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 3 விண்கலம், நிலவு வட்டப் பாதையை நேற்று வெற்றிகரமாக அடைந்தது.நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி அனுப்பப்பட்டது. புவி வட்டப் பாதையில் நிறுத்தப்பட்ட விண்கலம், 15 நாட்களுக்கு மேலாக, புவி வட்டப் பாதையில் சுற்றி வந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி, புவி வட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவு வட்டப் பாதையை நோக்கி, தன் பயணத்தை துவக்கியது. ஐந்து நாள் பயணத்துக்குப் பின், நேற்று மாலை 7:00 மணிக்கு, நிலவு வட்டப் பாதையை சந்திரயான் - 3 வெற்றிகரமாக அடைந்தது.இன்று முதல் நிலவு வட்டப் பாதையை அது சுற்றி வரும். இன்று இரவு 11:00 மணிக்கு படிப்படியாக விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப்பாதையை குறைக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். வரும், 23ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில், சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, லேண்டர் எனப்படும் தரையிறங்கும் சாதனத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் வைக்கப்பட்டுள்ள, ரோவர் வாகனம், நிலவின் மேற்பரப்பில் தன் ஆய்வுகளை மேற்கொள்ளும். சந்திரயான் - 3 பயணம் இதுவரை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்துள்ளதாக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us