UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 10:00 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
தமிழ்நாடு வேளாண் பல்கலை, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் வரும் 7ம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், மேலாண்மை, பூச்சி நோய் மேலாண்மை, உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் விளக்கம் அளிப்பதுடன், செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி கட்டணம், 750 ரூபாய். ஆர்வமுள்ள விவசாயிகள், 94867-34404 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகவும் சென்று பயிற்சியில் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.
