தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை தமிழ் சங்க தலைவர் அறிவுரை
தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை தமிழ் சங்க தலைவர் அறிவுரை
UPDATED : ஆக 07, 2023 12:00 AM
ADDED : ஆக 07, 2023 02:34 PM
தங்கவயல்:
பிற மொழிகளை படிப்பது தவறல்ல. ஆனால், தாய்மொழியை மறக்க கூடாது. தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும் என தங்கவயல் தமிழ் சங்க புதிய தலைவர் கலையரசன் அழைப்பு விடுத்தார். தங்கவயல் தமிழ்ச்சங்க பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. சங்க புரவலர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில், பேராசிரியர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசனி,ன் 65 ஆண்டுகள் தமிழ்ச் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புரவலர்களாக ஆனந்த கிருஷ்ணன், பேராசிரியர் கிருஷ்ண குமார், தலைவராக கலையரசன், செயல் தலைவராக கமல் முனிசாமி, பொதுச் செயலராக அன்பரசன், பொருளாளராக நடராஜன், துணைத் தலைவர்களாக ஆர்.வி.குமார், சுப்ரமணியம், இணைச் செயலர்களாக அப்பு ஜெயகுமார், திருமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் பேசுகையில், தமிழ் மொழிக் கல்வி தான் நமக்கு அடையாளம் காட்டும். தமிழை வளர்க்க ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் உருவாக வேண்டும். படிப்பகங்கள், நுாலகங்கள் வாசகர் வட்டம் ஏற்படுத்த வேண்டும். பணம் இருந்தால் அரசியல் அதிகாரம் பெற்றிடும் காலம் இது. ஆனால், அது நிரந்தரமல்ல. தாய்மொழிக் கல்வி என்பது நமது பண்பாடு, கலாசாரம், பாரம்பரியத்தை வாழவைக்கும். பிற மொழிகளை படிப்பது தவறல்ல. ஆனால், தாய்மொழியை மறக்கக் கூடாது, என்றார்.
