தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ராஸ் ஐ: மாணவ - மாணவியர் பாதிப்பு

மெட்ராஸ் ஐ: மாணவ - மாணவியர் பாதிப்பு

மெட்ராஸ் ஐ: மாணவ - மாணவியர் பாதிப்பு


UPDATED : ஆக 10, 2023 12:00 AM

ADDED : ஆக 10, 2023 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2023 12:00 AM ADDED : ஆக 10, 2023 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
 கர்நாடகா முழுதும் இதுவரை 40,477 பேர், மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே அதிகளவில் பரவியுள்ளது.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் ஏற்பட்ட சீதோஷ்ண மாற்றத்தால், பல ஆண்டுகளுக்கு பின், மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.கடந்த ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 935 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 40,477 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஹாவேரி, பீதர், ராய்ச்சூர் மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு அதிகளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மற்ற மாணவர்களுக்கும் பரவாத வகையில், பாதிப்படைந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளின் கண் நோய் பிரிவில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.செய்யக்கூடாதது
இது குறித்து, கண் டாக்டர்கள் கூறியதாவது:
இந்நோய் வைரசாகும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும். மழைக்காலம், குளிர்காலத்தில் இந்நோய் தீவிரமடைகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் கைக்குட்டை, துண்டு, தலையணையை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. அடிக்கடி கைகளை சோப்பு போட்ட கழுவ வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால், 3 - 4 நாட்களில் குணமாகலாம். இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச கண் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us