UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 06:28 PM
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலை உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் சங்கர்நடேசன், பதிவாளர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.துணைவேந்தர், பதிவாளர் அலுவலகம் முன் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே அமர்ந்து காலை 10:00 - 12:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டார்.அவர் கூறுகையில், பல்கலை வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூசா திட்ட நிதி விதிமீறி பிற பணிகளுக்காக சில பேராசிரியர்கள் இஷ்டத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இதை கண்டித்தும், பல்கலைக்கு வருவாய் தரும் வகையில் பயன்படுத்த வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டேன். ரூசா தொடர்புடைய இன்னோவேட்டிவ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் பணியிலிருந்து என்னை விடுவிக்க பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பதிவாளர் ராமகிருஷ்ணன், சிண்டிகேட் உறுப்பினர்கள் புஷ்பராஜ், நாகரத்தினம் உள்ளிட்டோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டார். சங்கர் நடேசன் பொறுப்பு பதிவாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
