தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹிந்தியில் மருத்துவ படிப்பு உத்தரகண்டிலும் அறிமுகம்

ஹிந்தியில் மருத்துவ படிப்பு உத்தரகண்டிலும் அறிமுகம்

ஹிந்தியில் மருத்துவ படிப்பு உத்தரகண்டிலும் அறிமுகம்


UPDATED : ஆக 12, 2023 12:00 AM

ADDED : ஆக 12, 2023 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2023 12:00 AM ADDED : ஆக 12, 2023 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டேராடூனில்:
உத்தரகண்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் விரைவில் ஹிந்தியில் மருத்துவ படிப்பை கற்பிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில சுகாதார அமைச்சர் தான்சிங் ராவத் கூறியதாவது:
உத்தரகண்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் விரைவில் ஹிந்தியில் பாடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஹிந்தியில் மருத்துவ படிப்பை அறிமுகம் செய்யும் இரண்டாவது மாநிலமாக உத்தரகண்ட் விளங்கும். இந்த மாத இறுதியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரகண்ட் வரவுள்ளார். அப்போது, ஹிந்தியில் தயாரான மருத்துவ பாடப் புத்தகங்களை அவர் அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கான பாடப்புத்தகங்களை பிரபல மருத்துவர்கள் அடங்கிய குழு தயாரித்துள்ளது. இந்த குழு, மாநில அரசால் அமைக்கப்பட்டது. தாய்மொழியில் மருத்துவம் படிப்பது, மாணவர்களுக்கு மிகப் பெரிய பரிசாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us