தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடைந்து விழுந்த பஸ் படிக்கட்டு: உயிர் தப்பிய மாணவர்கள்!

உடைந்து விழுந்த பஸ் படிக்கட்டு: உயிர் தப்பிய மாணவர்கள்!

உடைந்து விழுந்த பஸ் படிக்கட்டு: உயிர் தப்பிய மாணவர்கள்!


UPDATED : ஆக 12, 2023 12:00 AM

ADDED : ஆக 12, 2023 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2023 12:00 AM ADDED : ஆக 12, 2023 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
பராமரிப்பின்றி ஓட்டை, உடைசலாக இயங்கும் அரசு பஸ்களால் பயணிகள் அவதிக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது. ராமநாதபுரத்தில் நேற்று ஓடிய அரசு டவுன் பஸ்சின் படிக்கட்டு உடைந்து விழுந்தது. அதில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இம்மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் ராமநாதபுரம் நகர் பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமங்களுக்கு போதிய அரசு பஸ்கள் இல்லை. இதனால் ஆபத்தை உணராமல் கூட்ட நெரிசலில் மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பஸ்கள் முறையான பராமரிப்பின்றி ஒட்டை, உடைசலாக உள்ளன. மழை காலங்களில் ஒழுகுவதும், காற்றடித்தால் கூரைகள் பெயருவதும் உண்டு. பஸ் உள்ளே கம்பிகள் நீட்டிக் கொண்டும், இருக்கைகள் அமர முடியாதளவும் படுமோசமாக உள்ளன.இந்நிலையில் நேற்று காலை பெரியபட்டிணத்தில் இருந்து அரசு டவுன் பஸ் (4 சி) பயணிகளை ஏற்றிக் கொண்டு ராமநாதபுரம் அரண்மனை நோக்கி வந்தது. பயணிகள் அதிகம் இருந்ததால் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். காலை 7:50 மணிக்கு கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாப் அருகே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. படிக்கட்டில் பயணித்த 8 மாணவர்கள் கீழே விழுந்தனர். பஸ் குறைந்த வேகத்தில் நகர்ந்ததால் லேசான காயங்களுடன் தப்பினர். பயணிகளின் பாதுகாப்பில் இனியாவது அலட்சியம் காட்டாமல் முறையாக பராமரித்து தரமான பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முன் வர வேண்டும். காலை, மாலை பீக் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் வேண்டும் என்பதே பயணிகள் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us