தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு புது சலுகை

தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு புது சலுகை

தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு புது சலுகை


UPDATED : ஆக 12, 2023 12:00 AM

ADDED : ஆக 12, 2023 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2023 12:00 AM ADDED : ஆக 12, 2023 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கல்லுாரி இறுதி ஆண்டு தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு ஒரு மாதத்தில் நடத்தப்படும், &'மேக் அப்&' எனும் மறுதேர்வு முறையை நடப்பாண்டு முதல் அமல்படுத்த, பெங்களூரு பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.வழக்கமாக கல்லுாரியில் ஐந்தாவது, ஆறாவது செமஸ்டரில் தோல்வி அடையும் மாணவர்கள், மறு தேர்வு எழுத அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டும். இதனால், மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்ல காலதாமதம் ஆகிறது. இதை தவிர்ப்பது தொடர்பாக, சமீபத்தில் பெங்களூரு பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடந்தது.இது தொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயகரா ஷெட்டி கூறியதாவது:
கல்லுாரி இறுதி ஆண்டின் ஐந்தாவது, ஆறாவது செமஸ்டரில் தோல்வி அடையும் மாணவர்கள், மறு தேர்வு நடத்த அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டும். இதை தவிர்க்க, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள் மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 20,000 மாணவர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கிறோம். மேக் அப் எனும் மறுதேர்வுகளை அக்டோபரில் நடத்தி, அதே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும். இதனால், மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது. இத்திட்டத்தை, 2023 - 24ம் கல்வி ஆண்டிலிருந்தே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற பல்கலைக் கழகங்களும் அறிமுகம் செய்தால், மாணவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us