தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்த மருத்துவ உணவு முறை சென்னையில் சர்வதேச மாநாடு

சித்த மருத்துவ உணவு முறை சென்னையில் சர்வதேச மாநாடு

சித்த மருத்துவ உணவு முறை சென்னையில் சர்வதேச மாநாடு


UPDATED : ஆக 12, 2023 12:00 AM

ADDED : ஆக 12, 2023 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2023 12:00 AM ADDED : ஆக 12, 2023 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்:
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில், கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் சித்த மருத்துவ மற்றும் நலவாழ்வுக்கான உணவு முறைகள் குறித்து, இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடந்தது.இம்மாநாட்டில், இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்தும், கேரளம், பீஹார், ராஜஸ்தான், அசாம் மாநிலங்களில் இருந்தும், ஆயிரத்துக்கும் அதிகமான சித்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு, தேசிய இந்திய மருத்துவ முறை கழகத்தின் தலைவர் ஜெயந்த் தியோபூஜாரி தலைமை வகித்தார். தமிழக இந்திய மருத்துவ முறை இயக்குனரகத்தின் ஆணையர் மைதிலி ராஜேந்திரன், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில், 582- ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன. சித்த மருத்துவ உணவு முறைகள், அவற்றின் அறிவியல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us