UPDATED : ஆக 13, 2023 12:00 AM
ADDED : ஆக 13, 2023 05:54 PM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்:
தமிழ்நாடு சுற்றுலாத் துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பிற தனியார் நிறுவனங்கள் இணைந்து, இரண்டாம் ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழாவை மாமல்லபுரத்தில் நேற்று துவக்கின.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திறந்தவெளி கடற்கரை பகுதியில் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், குஜராத், பஞ்சாப் மாநிலங்கள், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாட்டினர், பலவகையான காற்றாடிகளை பறக்கவிட்டனர். இந்திய தேசியக்கொடி, சூப்பர்மேன், கடல்குதிரை, திமிங்கலம், ஆக்டோபஸ், கார்ட்டூன் உருவங்கள், பூமி உருண்டை உள்ளிட்ட பல வண்ணம், வடிவங்களில் வானில் பறக்கவிட்ட காற்றாடிகளை, சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
