UPDATED : ஆக 14, 2023 12:00 AM
ADDED : ஆக 14, 2023 11:29 AM
கோவை:
இஸ்ரோ விஞ்ஞானியுடன், கேள்வி - பதில் நிகழ்ச்சியில், இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என, சி.ஐ.டி., (கோவை தொழில்நுட்பக் கல்லுாரி) அழைப்பு விடுத்துள்ளது.இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும், கோவை கணிதவாணி கணித அறிவியல் கழகம், சி.ஐ.டி., நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உப்பிலிபாளையம், நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து, இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பல்வேறு விதமான செயல்பாடுகளை, தொடர்ந்து செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி சசிகுமாருடன், கேள்வி - பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது. அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கூட்டரங்கில், வரும் 26ம் தேதி, மதியம், 2:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. அனுமதி இலவசம். முன்பதிவு பெற்று கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புபவர்கள், 94884 62680 என்ற எண்ணுக்கு, வாட்ஸ்ஆப் மூலம் வரும் 22ம் தேதிக்கு முன் அனுப்பவேண்டும். மேலும் தகவல்களுக்கு, 94433 16984, 99526 41233 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
