நிலவுக்கு அடுத்து சூரியன்: ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 தயார்
நிலவுக்கு அடுத்து சூரியன்: ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 தயார்
UPDATED : ஆக 14, 2023 12:00 AM
ADDED : ஆக 14, 2023 04:15 PM
ஸ்ரீஹரிகோட்டா:
நிலவை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை ஏவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இது தற்போது, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. வரும் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 என்ற செயற்கைக்கோளை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு செயற்கைக்கோள் வந்தடைந்ததாகவும், இது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
