தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/70 ஆண்டுகளாக பாதுகாத்து வரப்படும் தேசியக்கொடி

70 ஆண்டுகளாக பாதுகாத்து வரப்படும் தேசியக்கொடி

70 ஆண்டுகளாக பாதுகாத்து வரப்படும் தேசியக்கொடி


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூரில் ஐந்து தலைமுறையாக, 70 ஆண்டுகளாக தேசியக் கொடியை குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டாவைச் சேர்ந்தவர் பலே ரகு. இவர் சித்லகட்டா நகர அமைப்பு ஆணைய முன்னாள் தலைவர். இவரது தந்தை வழி தாத்தா பலே அஞ்சினப்பா. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பின் ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும், வீட்டில் தேசிய கொடியேற்றி வந்தார்.இது தொடர்பாக, அவரது பேரன் பலே ரகு கூறியதாவது:எங்கள் தாத்தா பலே அஞ்சினப்பா, சுதந்திர போராட்ட வீரர். அவரது காலத்தில் தான், வீட்டில் தேசியக்கொடி ஏற்றும் வழக்கம் துவங்கியது. இப்போதும் அதே கொடியை ஏற்றி வருகிறோம். எங்கள் தாத்தா, பெண்கள் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். அப்போது கதைகள் மூலம், எங்கள் இதயங்களில் தேச பக்தியை விதைத்தார். நாங்கள் அனைவரும் சிறியவர்களாக இருந்தபோது, எங்கள் தாத்தா, அவரது தோழர்களின் சுதந்திர போராட்டத்தை பற்றி சொன்னது நினைவில் இருக்கிறது. தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் கற்றுக்கொடுத்த பாடத்தை என்றும் மறக்க முடியாது.என் தந்தை பிரபாகர், வழக்கறிஞர். அவர் தனது குழந்தைகள், பேரக் குழந்தைகளுடன் தேசியக்கொடியை ஏற்றினார். இப்போது, சுதந்திர தினத்தன்று எங்கள் வீட்டு குழந்தைகளுடன் சேர்ந்து தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவோம். ஐந்து தலைமுறையாக, 70 ஆண்டுகளாக இது தொடர்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us