தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை ரிசல்ட் தாமதம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலை ரிசல்ட் தாமதம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலை ரிசல்ட் தாமதம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலையின் இணைப்பில், 130 அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில் தன்னாட்சியற்ற, 80 கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை வழியே, செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு, விடைத்தாள் திருத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில், இளநிலை படிப்பில் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் படித்தவர்களுக்கு, மே மாதத்தில் இருந்து ஜூலை முதல் வாரம் வரையிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து ஆக. 1ம் தேதி விடைத்தாள் திருத்தம் துவங்கி நடக்கிறது.இந்நிலையில், விடைத்தாள் திருத்தம் முடிந்து, தேர்வு முடிவு வெளியிட தாமதமாவதால், தங்களால் முதுநிலை மற்றும் சட்ட கல்லுாரி படிப்புகளில் சேர முடியவில்லை என, மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தேர்வு முடிவை விரைந்து வெளியிட வலியுறுத்தி, சென்னை பல்கலை முன், இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் நேற்று திடீரென கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் பல்கலை அதிகாரிகள் பேச்சு நடத்தி, விரைவில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என, உறுதி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us