UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 10:21 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது.இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர, https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 என்ற இணைய தள பக்கத்தில் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 94999 66021, 044- 2250 1032 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
