தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாடும் வயதில் உடற்கல்வி வகுப்பில்லை

விளையாடும் வயதில் உடற்கல்வி வகுப்பில்லை

விளையாடும் வயதில் உடற்கல்வி வகுப்பில்லை


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிறுவயது மாணவர்களுக்கு, விளையாட்டை கற்று தர வேண்டிய தொடக்க பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களே நியமிக்காமல் உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை மீது அதிருப்தி எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 43,000த்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், 6,500 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மட்டும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆசிரியர்கள், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கே, உடற்கல்வி பயிற்சி அளிக்கின்றனர். அதேநேரம், 35,000த் துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், விளையாட்டு பயிற்சிக்காக, மாணவர்களுக்கு தனியாக வகுப்புகள் ஒதுக்கப்படவில்லை. அத்துடன், இந்தப் பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை.இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் விளையாட்டு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், 35,000க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படவே இல்லை. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும், வாரத்துக்கு இரு பாட வேளைகள் ஒதுக்கினாலே, நல்ல முறையில் உடற்பயிற்சி அளிக்க முடியும்.மாணவர்களை பொறுத்தவரை, 5 வயது முதல், 13 வயது வரை; அதாவது ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை நன்றாக ஓடி, ஆடி விளையாட வேண்டியது அவசியம். அதையே, உளவியலாளர்களும் வலியுறுத்துகின்றனர். இந்த வயதை சேர்ந்த மாணவர்களுக்கு தான், பள்ளிகளில் உடற்கல்வியில் முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, இளம் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு பயிற்சிகளை வழங்கும் வகையில், தமிழக அரசு அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளில், உடற்கல்வி பாட வேளை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க, உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us