மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க நமது சகோதரிகள் விழிப்புணர்வு போட்டி
மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க நமது சகோதரிகள் விழிப்புணர்வு போட்டி
UPDATED : ஆக 16, 2023 12:00 AM
ADDED : ஆக 16, 2023 09:28 AM
ராமநாதபுரம்:
அரசு ஐ.டி.ஐ.,களில் மகளிர் சேர்க்கையை அதிகரிக்க, நமது சகோதாரிகள், என்ற தலைப்பில் நாளை (ஆக.17) பேச்சு, கட்டுரை, கவிதைபோட்டிகள் நடக்கிறது.ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில்உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் 4.0 தொழில் நுட்ப மையம் துவங்கப்பட்டு மாணவர்களின் சேர்க்கை நடக்கிறது.இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்நாளை நமது சகோதரிகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபெற உள்ளது. இதில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டிகளில் பங்கேற்கலாம். எனவே ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்து சென்றவர்கள், தற்போது பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் சகோதரிகள், தாய்மார்கள் அனைவரும் பங்கேற்கலாம். மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்க துவங்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தில் அதி நவீன தொழில் நுட்பம் அடங்கிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறலாம், என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
