UPDATED : ஆக 18, 2023 12:00 AM
ADDED : ஆக 18, 2023 10:49 AM
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக, முதல்வர் தலைமையில் பேச்சு நடத்த வேண்டும் என ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தி உள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். கடந்த ஏப்., 8ல் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன், மூன்று அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்; அதன் பின்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.மீண்டும், அந்த அமைச்சர்களை சந்தித்து, முறையீடு செய்வது என்றும், முதல்வர் தலைமையில் பேச்சு நடத்த வலியுறுத்துவது என்றும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட, செப்., 9ல், கள்ளக்குறிச்சியில் உயர்மட்டக் குழுவை கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
