தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திராயன்-3: தனி பயணத்தை துவக்கியது விக்ரம் லேண்டர்

சந்திராயன்-3: தனி பயணத்தை துவக்கியது விக்ரம் லேண்டர்

சந்திராயன்-3: தனி பயணத்தை துவக்கியது விக்ரம் லேண்டர்


UPDATED : ஆக 18, 2023 12:00 AM

ADDED : ஆக 18, 2023 04:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2023 12:00 AM ADDED : ஆக 18, 2023 04:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த, லேண்டர் எனப்படும் சாதனம், நிலவை நோக்கி தன் பயணத்தை துவக்கி உள்ளது. வரும் 23ம் தேதி தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலத்தை ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது.லேண்டர் சாதனம்
இந்த விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். புரபல்ஷன் மாட்யூல் எனப்படும் உந்து கலன், லேண்டர் எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ரோவர் எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் அடங்கியதே சந்திரயான் - 3 விண்கலமாகும். இதில் உந்து கலனுக்குள் லேண்டர் சாதனமும், லேண்டர் சாதனத்துக்குள் ரோவர் வாகனமும் இடம்பெற்றுள்ளன. பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த, 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலம் செலுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து, நிலவை சுற்றி வருவதற்கான துாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகள், 6, 9, 14 மற்றும் 16ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை அனைத்து முயற்சிகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்துள்ளன. இதன் அடுத்தகட்டமாக, சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து செல்லும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமத்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக பிரிந்தது.சிறப்பு தொலைநோக்கி
இதுவரை லேண்டர் சாதனத்தை இயக்கி வந்த உந்து கலன், இனி நிலவைச் சுற்றி வந்து தன் ஆய்வை மேற்கொள்ளும். இதில் உள்ள சிறப்பு தொலைநோக்கி, பூமி குறித்து ஆய்வு செய்ய உள்ளது. தற்போது தனியாக பிரிந்துள்ள லேண்டர் சாதனம், நிலவில் இருந்து குறைந்தபட்சம், 30 கி.மீ., மற்றும் அதிகபட்சம், 100 கி.மீ., துாரத்தில் இருக்கும்போது நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப அதன் வேகம் இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. வரும் 23ம் தேதி இந்த இலக்கை எட்டியதுடன், லேண்டர் சாதனத்தின் வேகம் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, நிலவின் மேற்பகுதியில் மெதுவாக தரைஇறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us