10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பு
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பு
UPDATED : ஆக 20, 2023 12:00 AM
ADDED : ஆக 20, 2023 11:15 AM
நாமக்கல்:
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த, ஏப்., 6ல் துவங்கி, 20ல் முடிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், 300 பள்ளிகளை சேர்ந்த, 20 ஆயிரத்து, 641 மாணவ, மாணவியர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள், கடந்த, மே, 19ல், வெளியானது. தொடர்ந்து, மாணவர்கள் மேல்நிலை சேர்க்கை பெறுவதற்காக, தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.தற்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அசல் மதிப்பெண் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், மாணவ, மாணவியரின் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையடுத்து, நேற்று, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் வசம், மதிப்பெண் சான்றிதழ், ஒப்படைக்கப்பட்டது. இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ், வரும், 21ல், அந்தந்த பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்யப்படும்.
