தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்துவம், திறமையறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும்: கலெக்டர்

தனித்துவம், திறமையறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும்: கலெக்டர்

தனித்துவம், திறமையறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும்: கலெக்டர்


UPDATED : ஆக 20, 2023 12:00 AM

ADDED : ஆக 20, 2023 05:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2023 12:00 AM ADDED : ஆக 20, 2023 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
கல்லுாரி மாணவ, மாணவியர், தங்களது தனித்துவத்தையும், திறமையையும் அறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில், மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி, நேற்று நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தினர். கலெக்டர் உமா, போட்டியை துவக்கி வைத்து பேசியதாவது:
இன்றைய காலக்கட்டத்தில், கல்லுாரி மாணவ, மாணவியர், தங்களது தனித்துவத்தையும், திறமையையும் அறிந்து சிறந்த துறையை தேர்ந்தெடுத்து படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அனைத்து மாணவ, மாணவியர்களும் படிக்கும் காலத்தில் ஒற்றுமையாக இருப்பதை போன்று சமுதாயத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் தரத்தை உயர்த்துவதற்கு, தொழிற்கல்வி நிலையங்களின் தரத்தையும், முதல்வர் உயர்த்தியுள்ளார். அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற்று, நமது சமுதாயத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, மாணவ, மாணவியர் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்த பேச்சு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து, 41 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு, முறையே, 20,000, 10,000, 5,000 ரூபாய் பரிசுத்தொகையும், சான்றிதழும், தமிழக முதல்வர் வழங்குவார். மேலும், போட்டியில் முதல், இரண்டு இடங்களை பிடித்தவர்களுக்கு, வரும், 22ல், சென்னையில், மாநில அளவிலான போட்டி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us