தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி எங்கே?

பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி எங்கே?

பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதி எங்கே?


UPDATED : ஆக 21, 2023 12:00 AM

ADDED : ஆக 21, 2023 03:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2023 12:00 AM ADDED : ஆக 21, 2023 03:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
கல்வித்துறை சார்பில் மாணவர்களின் எழுத்து, பேச்சு கலைத்திறமைகளை வளர்க்கும் வகையிலும், பள்ளி இணை செயல்பாடுகள், கல்வி கலாசார செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டது.இதன்படி இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி வினா மன்றம், வானவில் மன்றம் சார்பில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, கதை விமர்சனம், தனிநபர் நடிப்பு, குறும்படம் தயாரிப்பு, அறிவியல் கண்காட்சி, பொது அறிவு உள்ளிட்ட போட்டிகள் பள்ளி அளவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்ட அளவில் 15 கல்வி ஒன்றியங்களில் உள்ள 305 பள்ளிகளில் இப்போட்டிகள் முடிந்து, ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதற்கு 15 ஒன்றியங்களிலும் ஒரு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளி அளவில் தேர்வான மாணவர்களை இம்மையங்களுக்கு ஒன்றிய போட்டிகளில் பங்கேற்க வைக்க தேவைப்படும் பயண, உணவு செலவு குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் இச்செலவை ஆசிரியர்கள், பெற்றோர் தலையில் கட்டுவதற்கு கல்வி அதிகாரிகள் கணக்குப் போட்டுள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 
இதுபோல கடந்தாண்டு கலைத்திருவிழா நடத்தப்பட்டது. அப்போது ஒன்றிய அளவில் தேர்வான மாணவர்களுக்கு ரூ.100, மாவட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு ரூ.200 நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும் அத்தொகை பெரும்பாலான பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல இந்தப் போட்டிகளுக்கும் நிதி ஒதுக்கீடு உள்ளதா என அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஒன்றிய போட்டி நடக்கும் இடம் 20 கி.மீ.,க்கும் மேலாக உள்ளது. மாணவர்களை அழைத்துச் செல்ல உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us