UPDATED : ஆக 21, 2023 12:00 AM
ADDED : ஆக 21, 2023 10:25 AM
பெங்களூரு:
தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வது குறித்து கல்வி வல்லுனர்கள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் முதல்வர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்துகிறார்.மத்திய அரசு வகுத்துள்ள தேசிய கல்வி கொள்கையை கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசு அமல்படுத்தியது. இதற்கு அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்து, மாநிலத்துக்கு தகுந்தபடி கல்வி கொள்கை வகுப்பதாக கூறியிருந்தது. தற்போது காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறது. எனவே தேசிய கல்வி கொள்கையை, ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து கல்வி வல்லுனர்கள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.மாநில கல்வி கொள்கை வகுப்பது, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, கவுரவ பேராசிரியர்கள் நியமனம், மாணவர்களுக்கு மடி கணினி வழங்குவது உட்பட கல்வி தொடர்பான பல விஷயங்கள் குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
