தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு கட்டாயம் விலக்கு பெறுவோம்: அமைச்சர்

நீட் தேர்வு கட்டாயம் விலக்கு பெறுவோம்: அமைச்சர்

நீட் தேர்வு கட்டாயம் விலக்கு பெறுவோம்: அமைச்சர்


UPDATED : ஆக 21, 2023 12:00 AM

ADDED : ஆக 21, 2023 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2023 12:00 AM ADDED : ஆக 21, 2023 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
நீட் தேர்வில் கட்டாயம் தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.நீட் தேர்வை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர், மருத்துவர், மாணவரணியினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவர் பேசியதாவது:
சர்வாதிகாரத்திற்கெதிராக ஜனநாயகத்தின் குரல் வலையை நெறிக்ககூடிய, தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கக்கூடிய, கல்வியில் நமக்குள்ள உரிமையை மாநில அரசுகள் பெறுகின்ற வரை இந்த நீட் தேர்வை ரத்து செய்கின்ற வரை, எப்படி நுழைவு தேர்வை ரத்து செய்ய கடைசி வரை போராடி முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்றாரோ, அதே போல முதலமைச்சரும் வெற்றி பெருவார்.எந்த பதவியில் இருந்தாலும், அது கொள்கையும், லட்சியமும், மாணவர்களின் நலனுக்காகத்தான் பயன்படுமே தவிர, பிறர் நலனுக்காக வாழுகின்ற இயக்கமாக தி.மு.க., இருக்கும். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பல்வேறு கட்சித் தோழர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நீட் தேர்வு ரத்து செய்வோம். இன்றைக்கு மருத்துவத்துறையில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்.மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் தி.மு.க., மற்றும் தோழமை கட்சியினர் தான். இது பெரிய போராட்டக்களம் வெற்றி கிட்டும் வரை தொடரும். நீட் தேர்வில் கட்டாயம் தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம்,என்றார்.அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: 
முன்னாள் ஆட்சியாளர்கள் மாணவர்களை ஏமாற்றினர். நீட் தேர்வு காரணமாக அனிதா தொடங்கி ஜெகதீஸ் வரை 23 மாணவர்கள் உயிரிழந்தனர். ஆனால், எதிர்கட்சியியான அ.தி.மு.க., வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டை மத்திய பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. அனைத்திலும் பாரபட்சம். மத்திய அரசோடு இணக்கமாக போக வேண்டுமென மத்திய இணை அமைச்சர் முருகன் கூறுகிறார்.இது சமூகநீதி, தனி கொள்கைளை நிலைநாட்டுகிற மாநிலம் தமிழ்நாடு. ஏழை, எளிய மாணவர்கள் செல்ல வேண்டுமென்றால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்றால் தனியார் கோச்சிங் வகுப்பில் பல லட்சங்களை செலவிட வேண்டும். திண்டுக்கல் மருத்துவ கல்லுாரியை ஏதோ ஒரு மூளையில் போய் கட்டியிருக்கிறார்கள். மக்கள் பயன்பாட்டிற்கான பொதுவான இடத்தில் கட்டியிருந்தால் பலர் பயன்பெற்றிருப்பர் என்றார்.பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன். எம்.பி., வேலுச்சாமி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் பங்கேற்றனர். மாலையில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் போராட்டத்தை பழச்சாறு வழங்கி நிறைவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us