தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கல்வித்துறை சார்பில் செஸ் போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் செஸ் போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் செஸ் போட்டி


UPDATED : ஆக 21, 2023 12:00 AM

ADDED : ஆக 21, 2023 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2023 12:00 AM ADDED : ஆக 21, 2023 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஏ ஜோன் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள், ராம்நகர், சபர்பன் பள்ளியில் நடந்து வருகின்றன. 11, 14, 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இதில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், முதல் மூன்று இடங்களை முறையே, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின், சஞ்சய், எஸ்.என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், பிரகதீஸ், பாரதீய வித்யாபவன் பள்ளியின் ஸ்ரீஹரி ஆகியோர் பிடித்தனர். 17 வயது மாணவர்கள் பிரிவில், முதல் மூன்று இடங்களை முறையே, சின்மயா வித்யாலயா பள்ளியின் நிகிலேஷ், பாரதீய வித்யாபவன் பள்ளியின் நந்தீஸ், ஜி.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், வேதஸ்வரூப் ஆகியோர் பிடித்தனர்.14 வயது மாணவர்கள் பிரிவில், முதல் மூன்று இடங்களை முறையே, எஸ்.என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிகில், ஸ்ரீராம், பாரதீய வித்யாபவன் பள்ளியின் லாவன் ஆகியோர் பிடித்தனர். இதேபோல், 11 வயது மாணவியர் பிரிவில், முதல் மூன்று இடங்களை பாரதீய வித்யாபவன் பள்ளியின், சாத்விகா, விஷ்ருதி, வி.வி.என்.எஸ்.பி., பள்ளியின் ஜனனி ஆகியோர் பிடித்தனர்.14 வயது மாணவியர் பிரிவில் முதல் மூன்று இடங்களை, சின்மயா வித்யாலயா பள்ளியின் தன்யஸ்ரீ, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் ஸ்ரீநிதி, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், லக்சனா ஆகியோர் பெற்றனர். 17 வயது மாணவியர் பிரிவில், முதல் மூன்று இடங்களை சின்மயா வித்யாலயா பள்ளியின் ஜெயஸ்ரீ, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியின் ஸ்ரீகா, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மித்ரா ஆகியோர் பிடித்தனர்.19 வயது மாணவியர் பிரிவில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் தர்ஷினி, பிரசென்டேஷன் கான்வென்ட் பள்ளியின் ஸ்ரீ ஹரிணி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் திருலோச்சனா ஆகியோர் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us