தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு


UPDATED : ஆக 21, 2023 12:00 AM

ADDED : ஆக 21, 2023 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2023 12:00 AM ADDED : ஆக 21, 2023 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மறைந்த தஞ்சாவூர் என்.எல்.அய்யர் எழுதிய, ஈஷாவாஸ்ய உபநிஷத் வியாக்யானம் புத்தக வெளியீடு விழா, சென்னை, மயிலாப்பூரில் நடந்தது.இந்த விழாவிற்கு, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் முன்னிலை வகித்தார். அவரது மூத்த சகோதரர், எல்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். சமஸ்கிருத கல்லுாரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், புத்தகத்தை வெளியிட்டு துவக்க உரையாற்றினார். இதில், நல்லி குப்புசாமி மற்றும் விவேக பாரதி நிறுவனர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில், கவர்னர் இல.கணேசன் பேசியதாவது:
என் தந்தை என்.எல்.அய்யர், கடந்த 1896ம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீ லஷ்மி ராகவன். தன்னுடைய வாழ்நாளில் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு, ஈஷாவாஸ்ய உபநிஷத் பற்றிய ஒரு நுாலை, 1953ல் எழுதி பதிப்பிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். அவர் தன், 56 வயதிலேயே மறைந்து விட்டார். அவர் மறைந்த பின், என்னுடன் சேர்த்து, சகோதர - சகோதரியர், ஒன்பது பேரையும் தாய் கண்ணும் கருத்துமாக வளர்த்தார்.இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது தந்தையாரின் ஆசை. இது வெளிவர, 70 ஆண்டுகளானது. என்னுடைய, 50 ஆண்டு பொது வாழ்க்கையில், ஓராயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பேசி இருக்கிறேன். எந்த மேடையானாலும், முன் தயாரிப்புகள் இல்லாமல் போனது இல்லை. ஆனால், இந்த மேடைக்கு வரும் போது, புத்தகத்தை பற்றி என்னால் போதிய அளவில் குறிப்பெடுக்க முடியவில்லை. நான் அதில் தோற்றுப்போனேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த புத்தகம் அத்தனை கனமானது.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us