தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சலுகைகளை தெரிவிக்க உத்தரவு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சலுகைகளை தெரிவிக்க உத்தரவு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சலுகைகளை தெரிவிக்க உத்தரவு


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாற்றுத்திறன் மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அரசின் சலுகைகளை, பள்ளி தகவல் பலகையில், கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த கல்வி சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, கல்வி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. பள்ளிக்கே வர முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, வீட்டிற்கே சென்று வகுப்பு கையாள, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதார வள மையங்கள் மூலம், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைசார் பள்ளிகளுக்கு வரும் மாற்றுத்திறன் குழந்தைகள், பிற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க, கற்றல் உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.இதுதவிர, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அரசால், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை, உரிய மாணவர்களின் வங்கி கணக்கு எண்ணிற்கே நேரடியாக பகிரப்படுகிறது. இத்தொகை, தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகை விபரங்களை, பள்ளி தகவல் பலகையில் இடம்பெற செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்ட பள்ளிகளில், 4,100 மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு அரசின் சலுகைகளை பெற்று தரும் பணியை, சிறப்பு ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். தற்போது ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 ஆயிரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 8 ஆயிரம் ரூபாயாக கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.இது, பள்ளி தகவல் பலகையில் மட்டுமல்லாமல், மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் இல்லாமல் இக்குழந்தைகள் பள்ளிக்கு வருவதை, தொடர் சிகிச்சை பெறுவதை கண்காணிக்கிறோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us