தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை: கவர்னர் ரவி

பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை: கவர்னர் ரவி

பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை: கவர்னர் ரவி


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள், கோவை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்க தலைவர் மற்றும் தமிழக உயர்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு, கவர்னர் ரவி அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக உயர்கல்வி மன்றம் தயாரித்துள்ள பொது பாடத் திட்டத்தை, அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகள் பின்பற்ற வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை அழுத்தம் கொடுப்பதாக, பல்கலைகளின் துணைவேந்தர்கள், கல்லுாரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர், என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.பொது பாடத்திட்டம், தற்போது கல்லுாரிகள் பின்பற்றும் பாடத்திட்டத்தை விட பின்தங்கிய நிலையிலும், தரமான கல்வியில் சமரசம் செய்து கொள்வதாகவும் உள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளனர். உயர்கல்வியானது, மத்திய அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யிடம், கவர்னர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் பெறப்பட்டது. இதற்கு, யு.ஜி.சி., தெளிவான விளக்கம் அளித்துள்ளது. பல்கலைகள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள், யு.ஜி.சி., விதிகளை பின்பற்றி, தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கவும், உரிய காலத்தில் புதுப்பிக்கவும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.எனவே, பொது பாடத்திட்டம் குறித்து, எந்த சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல், பல்கலைகளும், தன்னாட்சி கல்லுாரிகளும், நீங்களே உரிய சட்ட அமைப்புகளின் வழியே, பாடத்திட்டத்தை வடிவமைத்து பின்பற்றலாம். தமிழக உயர்கல்வி மன்றம் தயாரித்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த கடிதத்துடன், கவர்னர் ரவிக்கு யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் எழுதியுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us