தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜன.,7,8- தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு

ஜன.,7,8- தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு

ஜன.,7,8- தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாபெரும் தொழில்கனவு என்ற நோக்கத்துடன், கோவை கொடிசியாவில் ஸ்டார்ட் அப் திருவிழா எனும் இரண்டு நாள் நிகழ்வு நடந்தது.திருவிழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ஸ்டார்ட் அப் திருவிழா, கோவைக்கு அடுத்ததாக, தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து அனைத்து இடங்களிலும் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு, புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொழில் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் புதிய தொழில்பேட்டைகள் உருவாக்க பணிகள் நடக்கின்றன, என்றார்.தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:
தமிழ்நாடு, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது. டிரோன் டெஸ்டிங் வசதிகள், தமிழகத்தில் மட்டும்தான் உள்ளன. டிரோன் சர்வீஸ், மெடிக்கல் டெக்., இ-வாகன சார்ஜிங் ஸ்டேஷன், மெடிக்கல் டிவைஸ் என பல்வேறு பிரிவுகளில் மிகப்பெரிய தேவைகள் உள்ளன. ஜனவரி 7,8- தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.துவக்கவிழாவில், ஸ்டார் அப் இன்னோவேஷன் சென்டர் செயலாளர் அருண்ராய், முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மூன்று மடங்கு அதிகரிப்பு
விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: 
தமிழகத்தில் 2021ம் ஆண்டு, 2,300- ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்து, தற்போது 6,800- ஆக உள்ளது. இதுவரை, 109 நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை நிலவரப்படி, அதிக முதலீட்டாளர்களை ஈர்த்ததில், சென்னை முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us