காலை உணவு திட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் கடிதம்
காலை உணவு திட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் கடிதம்
UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 04:43 PM
சென்னை:
முதல்வரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக, 1,545 பள்ளிகளில் துவக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், வரும் 25ம் தேதி விரிவுபடுத்தப்பட உள்ளது.இந்த சூழ்நிலையில், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அரசு துவக்கப் பள்ளியில், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 1,545 பள்ளிகளைச் சேர்ந்த, 1.14 லட்சம் குழந்தைகள், காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள, 31,008 அரசு துவக்கப் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை, 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விரிவுபடுத்தப்பட உள்ளது. வரும் 25ம் தேதி, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், இந்த திட்டத்தைதுவக்கி வைக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
