UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 04:49 PM
அ நிறம் | அளவு
தேனி:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், கல்வியை உறுதி செய்தல், குழந்தை திருமணங்கள் தடுப்பு, பெண்கள் முன்னேற்றத்திற்காக ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகள் மூலம் விழிப்புணர்வு செய்த 5வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மாநில அரசு ஜன., 2024ல் பாராட்டு சான்றிதழ், ரூ.ஒரு லட்சம் வழங்க உள்ளது.இவ்விருது பெற விரும்பும் பெண் குழந்தைகள் நவ.,15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்கங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், சி.இ.ஓ., டி.இ.ஓ., குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், போலீஸ், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
