UPDATED : ஆக 27, 2023 12:00 AM
ADDED : ஆக 27, 2023 02:10 PM
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே, காலை உணவு திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதாக சத்துணவு அமைப்பாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டு உள்ளார். காலை உணவு திட்டம் கடந்த 25ம் தேதி மாநிலம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் இரூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும் துவக்கப்பட்டது.இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் தமிழ்நாடு சத்துதுணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுசெயலருமான சவிதா சமையல் கூடத்தை பூட்டு வைத்துக்கொண்டு அதன் சாவியை தரவில்லை என கூறப்படுகிறது. முதல்வரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கு இடையூறாக செயல்பட்டதால், இரூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு அமைப்பாளர் சவிதாவை ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார் .
