தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச தரத்தை நோக்கி என்.எல்.யு.,

சர்வதேச தரத்தை நோக்கி என்.எல்.யு.,

சர்வதேச தரத்தை நோக்கி என்.எல்.யு.,


UPDATED : ஜன 15, 2010 12:00 AM

ADDED : ஜன 15, 2010 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 15, 2010 12:00 AM ADDED : ஜன 15, 2010 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லியில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிடியூட் (என்.எல்.யு.,) ஓர் ஆண்டில் 20 சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்தியாவில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதில் மத்திய அரசு ஆர்வமாக இருக்கும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளிப்பதில் என்.எல்.யு., மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான சமூக, தனியார், பொதுத் துறை நிறுவனங்களுடன் இப்பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.


டெல்லி என்.எல்.யு., துணைவேந்தர் ரன்பிர் சிங் கூறுகையில், “வழக்கறிஞர்களும் தொழில்நுட்ப ரீதியாக அனுபவம் பெற்றவர்களாகவும், சர்வதேச அளவில் போட்டியிடுபவர்களாகவும், தற்போதைய சமுக தேவைக்கு ஏற்றவர்களாகவும் மாற்றுவதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். எனவே, அதற்கேட்ப சர்வதேச கல்வி அளிப்பதற்கான செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கல்வி நிறுவனம் என்பது ஒரு தீவு போல செயல்படக்கூடாது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்பவையாக இருக்க வேண்டும்.


தொழில்நுட்பம் மற்றும் சட்ட மையத்தை நிறுவ என்.எல்.யு., திட்டமிட்டுள்ளது. இதற்காக லீகல்கிராப் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இன்டெலக்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ் மற்றும் லா பிரிவில் டிப்ளமோ படிப்பை துவக்கியுள்ளோம். ஹாக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் விசேட் நெட்வொர்க் மூலம் வழங்கப்படும் இப்படிப்பை உலகத்தின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் படிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us