தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தென்மாநில வினாடி - வினா போட்டி கில்லி போல சொல்லியடித்த அரசுப்பள்ளி

தென்மாநில வினாடி - வினா போட்டி கில்லி போல சொல்லியடித்த அரசுப்பள்ளி

தென்மாநில வினாடி - வினா போட்டி கில்லி போல சொல்லியடித்த அரசுப்பள்ளி


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொருளாதார கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. மாநில வாரியாக வினாடி-வினா போட்டியில், முதலிடம் பெற்றவர்களுக்கு, ஐந்து மண்டலங்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, தென்மண்டல அளவிலான போட்டி, ஐதராபாத்தில், கடந்த 25ம் தேதி நடத்தப்பட்டது. இதில், காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ராம்பிரியா மற்றும் மாணவர் ஆகாஷ் ஆகியோர், முதல்பரிசு பெற்றனர். இவர்களுக்கு, தேசிய அளவிலான வினாடிவினா போட்டி, வரும் 14ம் தேதி, மும்பையில் நடக்கிறது.மாணவர் ஆகாஷ் மற்றும் மாணவி ராம்பிரியா கூறுகையில், ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெகட்டிவ் மார்க் ரவுண்டும் இடம்பெற்றது. துவக்கத்தில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினோம். ஒரு மாதமாக, வகுப்பு செயல்பாடுகளுடன், போட்டிக்கும் தயாரானோம். இறுதியில், கேரளாவை பின்னுக்கு தள்ளி முதல்பரிசு பெற்றோம். கோவை மற்றும் சென்னை ரிசர்வ் வங்கி ஊழியர்கள், போட்டிக்கு தயாராக வழிகாட்டினர். தலைமையாசிரியை விஜயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சுமதி ஆகியோர் கொடுத்த ஊக்கம் தான், முதல்பரிசு வென்றதற்கு முக்கிய காரணம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us