தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... தையல் வேலை!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... தையல் வேலை!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு... தையல் வேலை!


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களுக்கு, மாணவர்களுக்கான கை, கால், தோள்பட்டை, இடுப்பு அளவுகளை எடுத்து, இருநாட்களுக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல்நலன் குறித்த விபரங்களை, &'ஹெல்த் அண்டு வெல்பீயிங்&' பகுதியில், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில், மாணவர்களை வாசிக்க சொல்லி பார்வைத்திறன் அறிதல் வேண்டும், உயரம், எடை, ரத்தவகை, தொடர்ந்து மருந்துகள் எடுத்து கொள்பவர்களா உள்ளிட்ட, தகவல்களை பதிவேற்ற வேண்டும். இதோடு, மாணவர்களின் கை, கால், தோள்பட்டை, இடுப்பு அளவுகளை, துணி அளக்கும் &'டேப்&' கொண்டு அளந்து, பதிவேற்ற வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்களே, உடல் அளவுகளை எடுக்கலாம்.ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், மாணவர்களுக்கு ஆண் ஆசிரியரும், மாணவிகளுக்கு பெண் ஆசிரியரும், உடல் அளவுகளை பதிவேற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இம்மாத துவக்கத்தில், பணிகள் முடிக்கப்பட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. இதில், சிலரின் தகவல்கள் முழுமையாக பதிவாகாததால், தகவல் விடுபட்டவர்களுக்கு, இரு நாட்களுக்குள் மீண்டும் பதிவேற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து, மாணவர்களின் பல்வேறு தகவல்கள், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. கற்பித்தல் பணிகளுக்கு இடையில், இத்தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டன. தொழில்நுட்ப குளறுபடிகளால், பதிவேற்றிய சிலரின் தகவல்கள் விடுபட்டுள்ளன. மீண்டும் விடுபட்டோர் தகவல்களை, இருநாட்களுக்குள் பதிவேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, கற்பித்தல் அல்லாத பணிகளிலேயே, அதிக நேரம் செலவாகிறது. பாடம் எடுக்காமல், இதுபோன்ற பணிகளிலேயே நேரத்தை செலவிட்டால், எப்படி கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us