UPDATED : ஆக 29, 2023 12:00 AM
ADDED : ஆக 29, 2023 10:22 AM
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கல்லுாரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல, பிரேக் டவுன் ஆன அரசு பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்து, பயணித்த மாணவிகளின் வீடியோ வைரலாகிவருகிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று முன்தினம் மணக்குடிக்கு, மகளிருக்கு கட்டணம் இல்லா அரசு பஸ் புறப்பட்டது.இதில், நாகர்கோவில் குருசடி புனித சிலுவை கல்லுாரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்து, 100 மீட்டர் தொலைவிலேயே பஸ் பிரேக் டவுன் ஆனது.பஸ்சை ஸ்டார்ட் செய்ய டிரைவர் செய்த முயற்சிகள் வீணானதால் மாணவிகளை இறங்க சொன்னார். பஸ்சை தள்ளினால் தான் ஸ்டார்ட் ஆகும் என்ற நிலையில், அதை தள்ளுவதற்கு யாரும் தயாராகவில்லை. இதனால், மாணவிகளே பஸ்சை தள்ளத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியிலிருந்த சிலரும் டிராபிக் போலீஸ் ஒருவரும் சேர்ந்து பஸ்சை தள்ளி சிறிது துாரம் கொண்டு சென்றதும் ஸ்டார்ட் ஆனது. வெற்றி மகிழ்ச்சியில் கூக்குரலிட்டபடி பஸ்சில் ஏறிய மாணவிகள் அதில் பயணித்தனர். இந்த வீடியோ வைரலாகிறது.
