தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜி-20 அரங்கில் நிறுவ நடராஜர் சிலை டில்லி பயணம்

ஜி-20 அரங்கில் நிறுவ நடராஜர் சிலை டில்லி பயணம்

ஜி-20 அரங்கில் நிறுவ நடராஜர் சிலை டில்லி பயணம்


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:
புதுடில்லியில் அடுத்த மாதம் நடக்கவுள்ள, 'ஜி-20' மாநாடு அறையின் முகப்பில் வைக்க, சுவாமிமலையில் செய்யப்பட்ட, 28 அடி உயர நடராஜர் சிலை, லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், அடுத்த மாதம், 9,10ல், ஜி-20 மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடக்கும் அரங்கத்தின் முகப்பில் அமைக்க, சோழர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த ஸ்ரீ தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் இணைந்து, சிலையை வடிவமைக்கும் பணியை துவங்கினர்.பணிகள் முடிவடைந்த நிலையில், மத்திய அரசின், இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆப் ஆர்ட் மையத்தினர் சிலையை நேற்று பெற்றுக்கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம், லாரியில் ஏற்பட்டு, டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலை, 28ம் தேதி டில்லி சென்றடையும். சிலையை பிரதமர் மோடி திறக்க உள்ளார்.இதுகுறித்து, ஸ்பதிகள் கூறியதாவது:வழக்கமாக, ஐம்பொன்னால் தான் சிலைகள் உருவாக்கப்படும். ஆனால் செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி, வெள்ளீயம், இரும்பு, பாதரசம் உள்ளிட்ட அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்டதால், சிலை கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. நடராஜர் சிலை, 28 அடி உயரத்தில், 21 அடி அகலத்திலும், 25,000 கிலோ எடையில், 10 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 25 சதவீத பணிகளை, சிலை திறக்கும் போது மேற்கொள்ள, 15க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள், டில்லிக்கு சென்று உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us