தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில கலை போட்டிகள் அக்டோபரில் நடத்த முடிவு

மாநில கலை போட்டிகள் அக்டோபரில் நடத்த முடிவு

மாநில கலை போட்டிகள் அக்டோபரில் நடத்த முடிவு


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 06:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களுக்கான மாநில கலை போட்டிகளை, அக்டோபரில் நடத்த கலை பண்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், 40 ஜவகர் சிறுவர் மன்றங்கள் உள்ளன. இதன் பணிகளை, தமிழக கலை பண்பாட்டு துறை கவனிக்கிறது. இவற்றில், 5 வயது முதல், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கலை பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த வாரம் வரை, இந்த ஆண்டுக்கான மாவட்ட கலை போட்டிகள் நடந்தன. இதில், 9 முதல், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் போன்ற கலைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.முதலிடம் பெற்ற, 194 பேருக்கு, அவரவர் கலைகளுக்கான மாநில போட்டிகளை, அக்டோபரில் நடத்த தமிழக கலை பண்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக, 8 பேருக்கு தலா 10,000 ரூபாய்; இரண்டாம் பரிசாக 8 பேருக்கு, தலா 7,500 ரூபாய்; மூன்றாம் பரிசாக 8 பேருக்கு, தலா 5,000 ரூபாய் என, மொத்தம், 24 பேருக்கு, 1.80 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us