தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/15 நாள் பள்ளிக்கு ஆப்சென்ட் மாணவர் விவரம் சேகரிக்க உத்தரவு

15 நாள் பள்ளிக்கு ஆப்சென்ட் மாணவர் விவரம் சேகரிக்க உத்தரவு

15 நாள் பள்ளிக்கு ஆப்சென்ட் மாணவர் விவரம் சேகரிக்க உத்தரவு


UPDATED : ஆக 31, 2023 12:00 AM

ADDED : ஆக 31, 2023 03:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2023 12:00 AM ADDED : ஆக 31, 2023 03:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர் விபரங்களை சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை, பள்ளி அளவில் மேலாண்மை குழு கூட்டம் நடத்தி, பள்ளிக்கான வளர்ச்சி திட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு, முடிக்கப்படாமல் உள்ள பணி, தேவையான, மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதி குறித்து விவாதிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், உள்ளாட்சி உறுப்பினர், பெற்றோர் பங்கேற்று, தீர்மானம் நிறைவேற்றி, செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, செப்., மாதத்துக்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம், வரும், 1ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட உள்ளது. அதில், தொடர்ந்து, 15 நாட்களாக பள்ளிக்கு வராத மாணவ, மாணவியர் விபரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட மாணவரை பள்ளிக்கு வரச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறு முதல், 18 வயதுடைய இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது.இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏப்., மாத இறுதியில், 2023 - 24ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. செப்., மாதம் முதல் வாரத்தில் காலாண்டு தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், ஆக., இறுதிக்குள் நடப்பாண்டுக்கான அட்மிஷன் முடித்து விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு மாணவர் என்ற விவரத்தை இறுதி செய்யும் பணி துவங்கியுள்ளது. இதனால், இரண்டு வாரங்களுக்கு மேலாக பள்ளிக்கு வராத மாணவர் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரச் செய்வதற்கான முயற்சி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us