தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலை: அருங்காட்சியகம் திட்டம் என்னாச்சு?

பாரதியார் பல்கலை: அருங்காட்சியகம் திட்டம் என்னாச்சு?

பாரதியார் பல்கலை: அருங்காட்சியகம் திட்டம் என்னாச்சு?


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையில், 5 ஏக்கர் பரப்பளவில் பாரதியார் நினைவு நுாற்றாண்டை, மையமாக கொண்டு அருங்காட்சியகம், பிரமாண்ட நுாலகம் அமைக்கும் பணிகள், 2020ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதன்பின், துவக்கப்பட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.பாரதியாரின் பிறந்த நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் பாரதியார் பல்கலை கடந்த, 1982ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிலையில், நினைவு நாள் நுாற்றாண்டையொட்டி, பாரதி நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் சர்வதேச தரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட, காணிநிலம் என்ற பெயரில் பணிகள் துவக்கப்பட்டன.இதற்காக, பல்கலையில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தமிழக அரசு முதல்கட்டமாக இத்திட்டத்திற்கு, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், பல்கலை தரப்பில் 13 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும், அப்போதைய துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார். நிதி, நிலம், வரைபடம் அனைத்தும் தயார்நிலையில் இருந்த போதும், தற்போது வரை பணிகள் துவக்கப்படவில்லை.பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அருங்காட்சியகம் குறித்த தகவல், அரசு மானியக்கோரிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்த்த நிலையில், எவ்வித அறிவிப்பும் வரவில்லை. பாரதி அருங்காட்சியகம் மிக பிரமாண்ட முறையில் அமைய, அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us